உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகரில், தந்தையின் நண்பரால் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான சுனில் கௌதம் (35 வயது) என்பவர், இந்தச் சம்பவம் நடந்த இரு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.வியாழக்கிழமை இரவு 8 மணியளவில், சிறுமியின் தந்தையும், சுனிலும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர், சுனில் சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, அவளை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளார். சிறுமி வீட்டிற்குத் திரும்பியபோது, அவள் காயமடைந்திருந்ததைக் கண்ட குடும்பத்தினர், விசாரித்தபோது நடந்த முழு சம்பவத்தையும் வலியுடன் அவள் சொல்லியுள்ளாள். உடனடியாகச் சிறுமி ஜல்காரிபாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
தற்போது அவள் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயின் புகாரின் அடிப்படையில், சுனில் மீது POCSO சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பிறகு தலைமறைவான சுனிலை, காவல்துறையினர் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
