குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 28 வயது பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராதிகா கோடடியா, ஜனவரி 2026-ல் திருமணம் நடக்க இருந்த நிலையில், நவம்பர் 21ஆம் தேதி அன்று ஒரு கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால கணவருடனான சண்டைக்குப் பிறகுதான் ராதிகா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது மொபைல் ஃபோனை ஆய்வு செய்தபோது, ராதிகா தனது வருங்கால கணவருக்கு அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சிக்கியுள்ளது. அதில், “சின்ன விஷயங்களை எல்லாம் உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்,” என்று குறிப்பிட்டிருந்தார். இது, இருவருக்கும் இடையே உறவுச் சிக்கலும், மன அழுத்தமும் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
கஃபே ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் வருங்கால கணவர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். திருமணத்திற்குச் சில மாதங்கள் இருந்த நிலையில், இளம் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய ராதிகாவின் உரையாடல்கள் மற்றும் அழைப்புப் பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
