சமூக வலைத்தளங்களில் ஒரு வித்தியாசமான மற்றும் நம்ப முடியாத வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு கொடுரமான புலி (Tiger) குடிபோதையில் இருந்த ஒரு மனிதனை அவர் வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றாலும், இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (AI) பயன்படுத்தி, மிக உண்மையானது போல உருவாக்கப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
शराब में इतनी ताकत होती है, कि शराबियों को शेर घर छोड़ने आते हैं।
😂😁😂 pic.twitter.com/6nZiIrUGyX
— Dinesh Kumar (@DineshRedBull) November 22, 2025
இந்த ஏஐ வீடியோவில், புலி ஒன்று அந்தச் சீரான நடையில் இல்லாத மனிதனைத் தனது வாயில் கவ்விக்கொண்டு அவர் வீட்டு வாசலில் மெதுவாகக் கொண்டு வந்து விடுகிறது. அப்போதும்கூட அந்த நபர் போதையிலேயே இருக்க, புலி சில நொடிகள் அவரைப் பார்த்த பின் அங்கிருந்து ஓடிவிடுகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தவர்கள், “குடிபோதையில் இவ்வளவு சக்தி இருக்கிறது; அதனால் தான் புலிகள்கூடக் குடிகாரர்களை வீட்டிற்கு வந்து விடுகின்றன” என்று கிண்டலாகத் தலைப்பிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த நெட்டிசனுகள் பலர், இது ஏஐ வீடியோ என்று உறுதிப்படுத்தினாலும், “இவ்வளவு பெரிய குடிகாரனைச் சாப்பிடுவதைவிட, வீட்டிலேயே கொண்டுபோய் விடுவதுதான் நல்லது என்று புலி நினைத்திருக்கும் போல” என்று வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
