தேனி மாவட்டத்தில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த அவரது முன்னாள் பள்ளி நண்பர் மருதுபாண்டி (32) கைது செய்யப்பட்டுள்ளார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 28 வயதுள்ள அந்தப் பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஆன்லைன் விற்பனைக்காக தேனிக்கு வந்த திண்டுக்கல் மருதுபாண்டியுடன் அவருக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் நெருக்கமாக இருந்தபோது, மருதுபாண்டி சில வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய சூழலில், அந்தரங்க வீடியோக்களை மருதுபாண்டி அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், மருதுபாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மருதுபாண்டியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.