தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரங்கள் எனத் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்தச் சூழலில், நெல்லை மாவட்ட அரசியலில் முக்கிய நகர்வாக, நெல்லை கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளரான ம.கிரகாம்பல் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களைத் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இது, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுகவுக்குப் புதிய உற்சாகத்தையும், பலத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.