தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டத் தலைவர் விஜய் தரப்பிலிருந்து முக்கிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் தவறு செய்தாலோ அல்லது சரியாகப் பணியாற்றாவிட்டாலோ, அவர்கள் மீது புகார் அளிக்க சிறப்புத் தொலைபேசி எண்கள் வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சிக்குள் எழும் சந்தேகங்களைத் தீர்க்கவும், கட்சியினருடன் ஏற்படும் மோதல்கள் குறித்து உடனடியாகத் தலைவர் விஜய் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தவும், தலைவர் விஜயின் நேரடிப் பார்வைக்கு விஷயங்களைக் கொண்டு செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
