சமூக வலைத்தளங்களில் ஒரு பயங்கரமான விபத்துக் காட்சி குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர், வேகமாகச் சுழலும் பெரிய உருளை போன்ற இயந்திரம் (Roller Machine) அருகே நின்று வேலைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது.
வீடியோவில், பெண்மணி இயந்திரத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கை மெதுவாக இயந்திர உருளையில் சிக்கிக் கொள்கிறது. சில வினாடிகளிலேயே அவரது முழு உடலும் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு, ஒரு “காகிதம் போல” சுருண்டு, கோல வடிவத்தில் சுழல ஆரம்பிக்கிறது.
— Crazy Moments On X (@OnCrazyx) November 14, 2025
அதிர்ஷ்டவசமாக, சில சுழற்சிகளுக்குப் பிறகு, ஏதோ ஒரு பாதுகாப்பு ஏற்பாடு (Sensor) காரணமாக இயந்திரம் திடீரென நின்றுவிடுகிறது. இதனால் அந்தப் பெண்மணி உயிர் பிழைத்தாலும், இந்த விபத்தில் அவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படாதது குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
