பள்ளிக் கல்வித் துறை, நடப்பு ஆண்டிற்கான அரை ஆண்டுத் தேர்வு (Half-yearly Exam) அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன் படி, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்த பிறகு, மாணவர்களுக்கு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
