வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக அண்மையில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க. தலைவர் விஜயை நேரில் சந்தித்துப் பேசியதாக ஒரு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால், இந்தச் சந்திப்புச் செய்தி உண்மையல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்தில் வெளியான இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்த தகவல் தவறானது என்றும், அப்படிப்பட்ட எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இருப்பினும், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியக் கட்சிகளின் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற விவாதம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.
