2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நிர்வாகம் மிகப்பெரிய அதிரடியைச் செய்துள்ளது.

ஐபிஎல்-ன் மிக முக்கியமான வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்  ஒரு பகுதியாக, சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆல்-ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஏற்கெனவே ஓய்வு அறிவித்ததால், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் பட்டியல் மாறியுள்ளது.

“>

 

விடுவிக்கப்பட்ட 11 வீரர்கள் பட்டியல்:

ஜடேஜா மற்றும் சாம் கரண் பரிமாற்றம் தவிர, சிஎஸ்கே அணி நிர்வாகம் மேலும் பல வீரர்களை விடுவித்துள்ளது. அதில், நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர்-பேட்டரான டெவான் கான்வே, இளம் வீரர் ரச்சித் ரவீந்திரா, மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா போன்ற முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களில் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, வேதக் ரஷீத், வன்சி பேடி, நாகர்கோடி உள்ளிட்டோரும் அணியில் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்றங்கள் மூலம் சிஎஸ்கே அணி தனது அணியின் அமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்து, மினி ஏலத்திற்காக அதிகபட்சப் பணத்தை கைவசம் வைத்துள்ளது.