சமூக வலைத்தளங்களில், ‘ஜுகாட்’ (Jugaad) எனப்படும் இந்தியக் கண்டுபிடிப்புகள் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், ஒரு நபர் ஓடும் இருசக்கர வாகனத்தில் (Bike) தன் ஓய்வுக்காக ஒரு ‘கயிற்றுக் கட்டிலைக்’ (Khatia) கட்டி, அதில் கொசுவலையையும் கட்டிப் படுத்து உறங்கும் வீடியோ ஒன்று வைரலாகி, இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதமான ஐடியா, ‘ஜுகாட் அல்ட்ரா புரோ மேக்ஸ்’ என்று கிண்டலாகக் கொண்டாடப்படுகிறது.

வீடியோவில், ஒரு நபர் பைக்கின் பின் சீட்டில் ஒரு சிறிய கயிற்றுக் கட்டிலை மிகவும் கச்சிதமாகக் கட்டியுள்ளார். அதோடு, கொசுத் தொல்லை இல்லாமல் இருக்க, கொசுவலையையும் விரித்து, அதில் நிம்மதியாகப் படுத்துக்கொண்டு உறங்குவதைப் போன்ற சாகசத்தைச் செய்துள்ளார்.

பைக்கை வேறொரு நபர் ஓட்ட, பின்னால் படுத்திருப்பவர் அவ்வப்போது அசைந்து கொடுப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, கேலி மற்றும் வினோதமான உள்ளடக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்தச் சமூக ஊடக மோகம் மக்களை எத்தகைய விபரீதமான செயல்களைச் செய்ய வைக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.