சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் காணொளியில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி எதிர்பாராத விதமாகத் தனது உயிரைப் பணயம் வைக்கும் காட்சி அதிர்ச்சியை அளித்துள்ளது. சாலையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்த ஒரு பாம்பை கவனிக்காமல், அந்த பைக் ஓட்டி அதன் மீது ஏறிச் சென்றுள்ளார். இதனால் பாம்பு படுகாயம் அடைந்தது.

இதனையடுத்து, பைக் ஓட்டி தனது வாகனத்தை மீண்டும் பின்னுக்கு எடுக்கும்போது, ஆத்திரமடைந்த பாம்பு தற்காப்புக்காக வேகமாகப் பைக் ஓட்டியின் காலைக் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

பாம்பு கடித்த உடனேயே, பைக் ஓட்டிக்குத் தான் கடிக்கப்பட்ட உணர்வு ஏற்படவில்லை. ஆனால், பின்னால் கிடந்த பாம்பைக் கண்ட உடனேயே அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய், சமநிலை தடுமாறி பைக்கோடு கீழே விழுந்தார். விபத்துக்குள்ளான நபரின் தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும், இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

சிலர், “அறியாமல் நடந்த தவறு என்பதால், பாம்பு தற்காப்புக்காகவே கடித்துள்ளது” என்று பாம்புக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். மேலும் சிலர், “சாலையில் கவனமாக செல்ல வேண்டும்; இது கர்மா செய்த வினை” என்று பைக் ஓட்டியைச் சாடியுள்ளனர். இயற்கைக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு உடனடித் தண்டனை கிடைக்கிறது என்றும் சிலர் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.