உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தனது மருமகளைப் பார்த்து, மாமியார் கோபத்துடன் கத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்தில் சிக்கல்கள் இருந்ததால், சிசேரியன் செய்ய வேண்டிய நிலை இருந்தும், அந்த வயதான மாமியார் தன் மருமகளை சாதாரணப் பிரசவம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.  மேலும், பிரசவத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்த மருமகள் வலியால் அழுதபோது, மாமியார் அவரை கேலி செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ummul Khair Fatma (@drnaazfatima)

மாமியார் கோபத்துடன், “அழுதுகொண்டே இருந்தால் எப்படி அம்மா ஆவாய்? வாயை மூடு, இல்லனா உன் வாயை உடைப்பேன்!” என்று கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும், மருமகள் தன் கணவரின் கையைப் பிடித்து ஆறுதல் தேடியபோது, அதற்கும் மாமியார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மகப்பேறு மருத்துவரான டாக்டர் நாஸ் ஃபாத்திமா என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இந்தச் stressful சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கர்ப்பிணிப் பெண்களை அன்புடன் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பலரும் மாமியாரின் இந்த வன்முறை நடத்தையையும், மனைவியைக் காப்பாற்றாமல் இருந்த கணவரின் அலட்சியத்தையும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.