திருமணங்களில் எதிர்பாராத சில சுவாரஸ்யமான அல்லது அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்வது உண்டு. அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாகப் பரவி, அதைப் பார்ப்பவர்களை திகைக்க வைத்துள்ளது. திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது, மணமகனும் மணமகளும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை அணிவிக்கத் தயாரான நிலையில், அவர்களுக்குக் கீழ் இருந்த மேடை திடீரென உடைந்து இருவரும் தரையில் விழுந்தனர். அருகில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் அவர்களைக் காப்பாற்ற ஓடி வருவதற்குள், எல்லாம் முடிந்துவிட்டது.
स्टेज बनाने वाले को सीधे लाइव पेश किया जाए…
लोग कहते हैं ‘डिज़ाइन मास्टर’, हम कहते हैं ‘सस्पेंस का असली हीरो’ 😜😂🎭 pic.twitter.com/6rPtZ3mAig— talwar vipin ❤️ (@vipintalwar74) November 11, 2025
சிவப்பு நிற உடை அணிந்திருந்த மணமகள், மேடை உடைந்ததில் தரையின் உள்ளேயே புதைந்துபோனது போலக் காட்சியளித்தார். மணமகனும் அதிர்ச்சியில் தரையில் விழுந்தார். இந்த பயங்கர விபத்தைக் கண்ட விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். உறவினர்கள் ஓடி வந்து, கீழே விழுந்த மணமக்களின் நிலை மோசமடைவதற்குள், அவர்களைச் சிரமப்பட்டு மீட்டனர். தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், இந்த அளவுக்கு தரமில்லாத மேடையை அமைத்தவர்களைக் கடுமையாக விமர்சித்து, “இவர்கள்தான் ‘சஸ்பென்ஸ் ஹீரோக்கள்'” என்று கேலியும் செய்து வருகின்றனர்.
