ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், கண்டுகூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்ததில், அதில் பயணித்த 29 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சிட்யால மண்டலம், பிட்டாம்பள்ளி அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Vihari Travels got totally burnt in Chityala, Telangana.
Another bus accident in 2 weeks. But this time everyone in bus came out. pic.twitter.com/aLNDCRY8OO
— Telangana Maata (@TelanganaMaata) November 11, 2025
பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை எச்சரித்து கீழே இறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவி, முழுப் பேருந்தையும் எரித்து சாம்பலாக்கியது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வருவதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாகத் தெலுங்கு மாநிலங்களில் பேருந்து விபத்துகள் தொடர்கதையாகி, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
