நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் (நவம்பர் 12) தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை (நவம்பர் 13) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.