சமூக ஊடகங்களில் சமீபகாலமாகப் பிரபலமடைவதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து வெளியான ஒரு திகைப்பூட்டும் வீடியோ தற்போது நாடு முழுவதும் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள அவஸ்தி சவுக் பகுதியில், ஒரு இளைஞர் தனது கழுத்தைச் சுற்றிலும் ஒரு உயிருள்ள பாம்பை மாட்டிக்கொண்டு, ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச் சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
नागपूरच्या अस्थी चौक परिसरात दोन तरुणांनी साप गळ्यात घालून दुचाकीवरून फिरतानाचा धक्कादायक व्हिडिओ सोशल मीडियावर व्हायरल झाला आहे.हा विषारी नसलेला ‘धामन’ साप होता, मात्र या धोकादायक कृत्यावर ट्रॅफिक पोलिसांनी तत्काळ कारवाई सुरू केली आहे.#Nagpur #ViralVideo #SnakeStunt #RoadSafety pic.twitter.com/yFF5wYayWI
— Mahavoice News (@MahaVoiceNews) November 3, 2025
ஸ்கூட்டரின் பின்னால் மற்றொருவர் அமர்ந்திருக்க, இளைஞர் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பயங்கரமான சாகசச் செயல், சாலையில் சென்றுள்ள மற்றவர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தினர். நாக்பூர் போக்குவரத்து காவல்துறை, வீடியோவில் தெளிவாகத் தெரியும் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாகசத்தில் ஈடுபட்ட இருவர் மற்றும் வீடியோ எடுத்த நபர் ஆகியோரின் அடையாளங்களை உறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற அபாயகரமான செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், விளம்பரத்திற்காகப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாத இத்தகைய செயல்களைப் பரப்புவது தவறு என்றும் காவல்துறை கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.
