அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. எரிபொருளுடன் புறப்பட்ட (Take-off) யுபிஎஸ் கார்கோ விமானம் (UPS Cargo Plane), வானில் ஏறிய சில நிமிடங்களிலேயே திடீரெனத் தீப்பிடித்தது. அதன்பின்னர், விமான நிலையத்தின் அருகிலிருந்த கட்டிடங்கள் மீது மோதி, பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

“>

 

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேர் குறித்த முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாகப் போராடி வருவதால், விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

“>