அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகர மேயர் பதவிக்கான தேர்தல், நேற்று (நவம்பர் 4) நடைபெற்று, அதன் முடிவுகள் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகளால் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் ராஜினாமா செய்ததையடுத்து நடந்த இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி (வயது 34), குடியரசுக் கட்சி வேட்பாளரான கர்டிஸ் ஸ்லிவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். மம்தானியின் வெற்றியைப் பற்றி, அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கருத்துக் கணிப்புகளை மெய்ப்பித்து, தலைமுறைகளில் இளம் மேயராக அவர் பதவியேற்க உள்ளார்.