கர்நாடக தலைநகர் பெங்களூரில் குப்பை பிரச்சனை முடிவில்லா சிக்கலாக தொடர்கிறது. நகரில் துப்புரவு ஊழியர்கள் தினமும் வீடு வீடாக குப்பை சேகரித்தாலும், பலர் இன்னும் பொதுஇடங்களில் குப்பையை தூக்கி எறிந்து வருவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், குப்பை வீசுவது குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பொதுநிலங்களில் யார் குப்பை வீசினாலும், அவர்களை செல்போனில் வீடியோ எடுத்து 94481 97197 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினால் ரூ.250 சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடியோவில் தெளிவாக கண்டறியப்படும் வீட்டின் முன் பல இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் சேர்த்து கொட்டப்படும் என்றும், குப்பை வீசியவருக்கு அபராதமும் விதிக்கப்படும். அதே வேளை வீடியோவை அனுப்பியவருக்கு உடனடியாக UPI மூலம் சன்மானம் வழங்கப்படும் எனவும் நிர்வாகம் எச்சரிக்கையுடன் அறிவித்துள்ளது.
