சமூக ஊடக உலகம் பல புதிய வீடியோக்களின் களமாக உள்ளது. அங்கே எப்போது என்ன வைரலாகும் என்று கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள ஒரு காணொளி, அதன் அதிர்ச்சியூட்டும் காட்சியால் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தக் காணொளியில், திறந்த சாலையில் ஒருவர் சவாரி செய்ததைச் சாதாரணமாகக் காணலாம். ஆனால், அவர் எந்தவொரு வாகனத்திலும் பயணிக்கவில்லை; மாறாக இரண்டு எருமைகள் மீது அமர்ந்து சவாரி செய்தார்!
இந்த ஆச்சரியமான காட்சியில், ஒரு பெரிய எருமை, அதன் மீது மற்றொரு எருமை, மற்றும் அதன் மேல் அமர்ந்திருக்கும் ஒரு மனிதர் என்ற அரிய காம்பினேஷன் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக, அவர்கள் யாருடைய சமநிலையும் குலையாமல் இந்த சவாரியைச் செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் உண்மையா அல்லது செயற்கை நுண்ணறிவின் (AI) கைவண்ணமா என்று பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை @bukhulk_vlog என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. இது கோடிக்கணக்கான பார்வைகளையும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒரு பயனர், “இது நிஜமா அல்லது ஏஐயா?” என்று கேட்க, மற்றொருவர், “மக்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
