தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலை பகுதியில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, சம்பந்தப்பட்ட சாலையில் பேருந்துகள் அதிக வேகத்தில் செல்கின்றன, இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

மேலும் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.