தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பைசன் படம் திரையரங்குகளில் வெற்றியை பெற்றுள்ளது. இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் நடந்த பைசன் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாரி செல்வராஜ் கூறிய உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் பெரும் கவனம் பெற்றது. அவர் கூறியதாவது,

“நான் ஏன் இந்த மாதிரியான படங்களை எடுக்கிறேன் என்று இனிமேல் கேட்காதீங்க. அது என்னை பெரிதும் பாதிக்கிறது. நான் சாதி எதிர்ப்பு படங்களை எடுப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்டு 300 படங்கள் வருகின்றன, என்னை விட்டுவிடுங்கள்.”

மேலும் மாரி செல்வராஜின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக தென் மாவட்டங்களில் உள்ள பதற்றத்தை குறைப்பதற்காகவே தான் இதுபோன்ற படங்களை இயக்குவதாக மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.