தற்போது விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் “கிங்டம்” திரைப்படம் மூலம் வெற்றியை பெற்றார். அந்த படத்தில்   பாக்யஸ்ரீ போர்ஸுடன் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் விஜய் தற்போது ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த புதிய படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதற்கிடையில், 51 வயதான பிரபல நடிகை கஸ்தூரி சங்கர் விஜய் தேவரகொண்டாவுடன் சிறப்புப் பாடலில் நடிக்கத் தயாராக உள்ளார் என்று சமீபத்தில் அறிவித்தார். கடந்த ஒரு நிகழ்ச்சியில், தொகுப்பாளர், சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்பட்டால் விஜய் தேவரகொண்டாவின் சகோதரியாக நடிப்பீர்களா?” என்று கேட்ட போது, கஸ்தூரி கூறியது, “சகோதரி கதாபாத்திரம் அல்ல… குறைவான சம்பளம் கொடுத்து அவருடன் சிறப்புப் பாடலில் நடிக்கச் சொன்னால் கூட தயாராக இருக்கிறேன்,”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கஸ்தூரி கூறிய இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மற்றும் ரசிகை வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.