சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தானலட்சுமி தம்பதியருக்கு, தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது.

நேற்று, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலுவை சந்திக்க சந்தானலட்சுமி தனது குழந்தையுடன் சென்றிருந்தார்.

அப்போது, குளியலறையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் (சுமார் 14 அங்குல ஆழம்) தனுஷ் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த சந்தானலட்சுமி உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து  தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் தனுஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.