வரும் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸையும் அவர் சந்தித்து முக்கியமான கலந்துரையாடல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புகள், நீண்ட நாட்களாக இடைவெளி இருந்த பாஜக–பாமக உறவுகளை மீண்டும் நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில், பாமகவின் ‘மாம்பழம்’ சின்னம் மீண்டும் அன்புமணியின் வசம் வந்துள்ளதுடன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அன்புமணி பட்டியலிட்டு பாஜக தலைமைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக–அதிமுக கூட்டணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் புதிய அதிர்வலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
