விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கலந்துகொண்டபோது, தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது தந்தையான நடிகர் விக்ரம், தன்னை வாழ்க்கையில் இரண்டு மூன்று முறைதான் அடித்திருப்பார் என்று குறிப்பிட்ட துருவ், அதில் ஒரு சம்பவம் மிகவும் மறக்க முடியாதது என்றார்.
அது என்னவென்றால், விக்ரம் நடித்த ‘I’திரைப்படத்தின் “மெர்சல் ஆயிட்டேன்” பாடலுக்கான படப்பிடிப்புக்கு முன்பாக, அந்தப் பாடலின் பென் டிரைவ் வீட்டில் இருந்ததாம். துருவ் விக்ரம் அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் அதை ஓடவிட்டு ‘சீன்’ போட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட துருவ் விக்ரமின் அக்கா இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த விக்ரம் வீட்டிற்கு வந்ததும் துருவ் விக்ரமின் முதுகில் “தபால்” என்று ஒரே அடியாகப் போட்டுள்ளார்.
அந்த அடி வாங்கிய கைத்தடம் இரண்டு வாரங்கள் வரை தன் முதுகில் அப்படியே இருந்ததாகவும், அதுதான் தந்தையிடம் தான் வாங்கிய மறக்க முடியாத அடியாக இருந்ததாகவும் துருவ் விக்ரம் இப்போது நகைச்சுவையுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் காணொளியை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
