மருத்துவ துறையில் பெரும் அதிசயமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய கண் உள்வைப்பு சாதனமொன்று பார்வையற்ற நபர்களுக்குப் புதிய நம்பிக்கையையும், காணும் திறனையும் வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை இணைந்து மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், ‘ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ போன்ற மரபணு காரணமாக பார்வை இழந்த நோயாளிகள் இச்சிகிச்சையில் பங்கேற்றனர்.
நோயாளிகளின் கண்ணில் சிறிய மைக்ரோசிப் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சிறிய கேமராவுடன் இணைக்கப்பட்டிருப்பதோடு, முன்னால் உள்ள காட்சிகளை படம்பிடித்து அவற்றை டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றி, மூளைக்கு அனுப்பும் முறையில் செயல்படுகிறது.
🚨 Incredible white pill 🚨
a micro-retinal implant just restored sight in people who were completely blind from macular degeneration!
in the clinical trial 81 % of patients regained clinically meaningful vision
not full natural sight yet, but it’s the first clear proof that… https://t.co/mudtrrTog8 pic.twitter.com/llkboMVHJX
— vittorio (@IterIntellectus) October 20, 2025
“>
இந்த மைக்ரோசிப்பின் சிறப்பு, அதில் செயல்படும் AI மென்பொருள் வழியாக, பார்வை நரம்பு வழியே அனுப்பப்படும் தகவல்களை விரைவாக பகுப்பாய்வு செய்து, பயனருக்குத் தெளிவான படமாக மாற்றுவதில் இருக்கிறது. சோதனைகளில் பங்கேற்ற சில நோயாளிகள், இந்த உள்வைப்புப் பதிந்த பின் ஒளி, வடிவங்கள், முகங்களை அடையாளம் காணும் அளவிற்கு பார்வை திறனை பெற்றுள்ளனர்.
இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பத்தின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, இது பார்வை சிக்கல்களுக்கு எதிரான மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய யுக்தியாகக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சை இன்னும் மேம்படுத்தப்பட்டு பரவலாகக் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
