விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யக்கூடிய மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், பிற மாவட்டங்களிலும் நிலைமையை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக மேலும் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
