உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் தங்கையை திருமணம் செய்ய மறுத்த மைத்துனனின் தனிப்பட்ட பகுதியை வெட்டி எறிந்தது ஒரு பெண். தகவலின்படி, உமேஷ் (20) என்ற இளைஞர், தன் அண்ணியின் தங்கையுடன் காதலில் இருந்துள்ளார். ஆனால், குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திருமணத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அக்கா மஞ்சு, பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரச் செயலை நிகழ்த்தியுள்ளார். உமேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது, மஞ்சு கூர்மையான கத்தியால் அவரின் தனிப்பகுதியை வெட்டியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அதிர்ச்சியுடன் எழுந்த உமேஷ் வலியால் அலறியுள்ளார்.

அவரது குரலைக் கேட்டு அண்ணன் அறைக்கு ஓடி சென்றபோது, உமேஷ் ரத்தக் குளத்தில் கிடந்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் மஞ்சு தான் குற்றவாளி என போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உமேஷின் நிலை தற்போது நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. முழுமையாக குணமடைவதற்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பிரயாக்ராஜ் பகுதியில் அதிர்ச்சியையும், அதேசமயம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.