பெங்களூருவில் உள்ள ஜி.டி. மாலில் திங்கட்கிழமை காலை நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 34 வயது இளைஞர் சாகர் என்றவர் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதை உறுதி செய்தனர். சாகர் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும் அவருக்கு வேலை இல்லை திருமணமும் ஆகவில்லை என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது சாகரின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவர் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாலேயே இறந்ததாகவும் இதில் வேறு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறப்படுகிறது.
சாகருக்கு நீண்ட காலமாக மனநல பிரச்சினை இருந்தது. அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். வேலை இல்லாதது மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் அவரை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கலாம். போலீசார் அவரது மொபைல் போன் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆராய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மால்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர். சாகரின் குடும்பத்தினர் இந்த இழப்பால் பெரிதும் வருந்துகின்றனர்.
