ஒரு பள்ளி மாணவரின் வாழ்க்கையை காப்பாற்றிய நாயின் தைரியமான செயல், சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி, லட்சக்கணக்கானோரின் மனதைத் தொட்டுள்ளது. அமைதியான கிராம சாலையில், பசுமையான வயல்கள் மற்றும் அடர்ந்த காட்டால் சூழப்பட்ட இடத்தில், பள்ளிப் பையைத் தூக்கியபடி மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டிருந்த சிறுவனை திடீரென, அருகிலுள்ள புதரில் இருந்து இருந்து ஒரு சிறுத்தை வேகமாகக் குதித்து தாக்கியது.

அந்த நொடியில், அச்சம் தோன்றும் அளவுக்கு வேகமான அந்தத் தாக்குதல், சினிமா காட்சியைப் போலத் தோன்றியது. ஆனால், அந்த ஆபத்தான தருணத்தில், எங்கிருந்தோ ஒரு நாய் ஓடி வந்து, சிறுத்தையின் வாயைப் பிடித்து, தீவிரமாகப் போராடத் தொடங்கியது. சில வினாடிகள் நடந்த அந்தப் போராட்டத்தில், நாயின் தைரியம் புலியைத் துரத்தி அனுப்பி சிறுவனைப் பத்திரமாகக் காப்பாற்றியது. இந்த வீடியோவைப் பார்த்து, பலரும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். “இது வெறும் விலங்கு இல்லை, குழந்தையின் பாதுகாவலர், கடவுள் அனுப்பிய உதவி” என்று சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்தனர்.

இன்ஸ்டாகிராமில் “nivrithi_reddy_123” கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்தக் காணொளி, லட்சக்கணக்கான பார்வைகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதுதான். உண்மையான வாழ்க்கையில், ஒரு நாய் புலியை வெல்வது கடினம் என்பதால், இந்த வீடியோவின் யதார்த்தத்தன்மை தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியமானது.