மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான கங்கா என்ற மூதாட்டி, தனது மகன் கமலேஷ் (46)- க்கு கிட்னியை தானம் செய்து மனிதாபிமானத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கிட்னி கோளாறால் அவதிப்பட்டு டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த கமலேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலையில், தாயார் கங்கா தன் கிட்னியை மகனுக்காக தானமாக வழங்க முன்வந்தார்.

மருத்துவ பரிசோதனையில் கங்காவின் இரு கிட்னிகளும் சிறப்பாக செயல்படுவதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் கங்காவின் கிட்னி கமலேஷுக்கு பொருத்தப்பட்டது. தற்போது தாயும் மகனும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற தன் உடல் உறுப்பை தானம் செய்த தாயின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.