தலைநகர் டெல்லியின் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அங்கு பணியாற்றும் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிய வாக்குவாதமாக தொடங்கிய தகராறு, சில நொடிகளில் கைகலப்பாக மாறியது. கோபத்தின் உச்சத்தில் இருந்த ஊழியர்கள், குப்பைத்தொட்டிகளை வீசி, ஒருவரை ஒருவர் தாக்கினர். சிலர் பெல்ட்-ஐ கழற்றி அடிக்கும் அளவுக்கு சூழல் தீவிரமானது.
Video: With Belts, Dustbins, WWE-Style Royal Rumble At Delhi Train Station pic.twitter.com/Np1SLYjYiF
— NDTV (@ndtv) October 17, 2025
இதை கண்டு அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென நடந்த இந்த மோதலை பார்த்த சிலர், “இவர்கள் IRCTC ஊழியர்களா இல்லையா WWE வீரர்களா?” என்று கேலி செய்யவும், அங்கிருந்து ஒதுங்கினர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
