சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வேடிக்கையான வீடியோ, விலங்குகளின் உலகில் உள்ள நட்பு  அழகை அழகாகக் காட்டுகிறது. பொதுவாக பூனை மற்றும் நாய் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்று நினைக்கப்படும், ஆனால் உண்மையில் அவை ஒன்றாக வாழ்ந்து, சிறு சிறு வேடிக்கையான செயலை செய்யும். இந்த வீடியோவில், ஒரு பூனை குட்டி தனது செயல்  மூலம் நாயை சிக்க வைக்கும் காட்சி, கார்ட்டூன் திரைப்படங்களை விட வேடிக்கையாக இருக்கிறது.

வீடியோவில், டிவி அருகில் அமர்ந்து அமைதியாக இருக்கும் நாய், அப்போது அங்கு பூனை வருகிறது. பூனை, கண்ணாடி ஜார் ஒன்றை தவறவிட்டு உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறது. அப்போது வீட்டு உரிமையாளர் வருகிறார். பூனையின் செயலின்  காரணமாக, நாய் சிக்கிக் கொள்கிறது.

உரிமையாளருக்கு நாய் ஜாரை உடைத்தது போல் தோன்றி, நாய் தனது மொழியில் “நான் செய்யவில்லை” என்று விளக்க முயல்கிறது. பூனையின் விரைவும் ஏமாற்றும் திறனும், நாயின் அப்பாவித்தனமும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த வேடிக்கையான வீடியோவை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் @Boldyboy1975 என்ற கணக்கு பதிவேற்றியுள்ளது. வெறும் 10 வினாடி நீளமுள்ள இந்த வீடியோவுக்கு, 18 லட்சத்திற்கும் மேல் பார்வைகள் கிடைத்துள்ளன, 50 ஆயிரத்திற்கும் மேல் லைகுகள் பெற்றுள்ளது. நெட்டிசன்கள், “இவை உண்மையான டாம் அண்ட் ஜெர்ரி” என்றும், “பூனையின் ஏமாற்றும் திறன் மற்றும் நாயின் அப்பாவித்தனம் பார்த்து மனம் மகிழ்ச்சியடைந்தது” என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

சிலர் இதை “இன்றைய மூட் லிஃப்டர்” என்று பாராட்டியுள்ளனர். “பூனைகள் உண்மையில் சாப்பக்கேட்டுகளின் அரசி” என்று வேடிக்கையாகக் கூறியுள்ளனர். இந்த வீடியோ, விலங்குகளின் அழகிய தருணங்களைப் பகிர்ந்து, மக்களுக்கு சிரிப்பை அளித்து வருகிறது.