காடுகளில் சிங்கத்துக்கும், சிறுத்தைக்கும் இடையே மோதல் என்பது புதுசல்ல. ஆனால் இப்போது வைரலாகும் ஒரு வீடியோவில், இந்த இரு விலங்குகளும் நிலத்தில் அல்லாமல், மரத்தின் மேல் கிளையில் மோதிக்கொண்ட காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக சிங்கம் அதிக எடையுடையது என்பதால் உயரமான கிளைகளுக்கு ஏறுவதில்லை. ஆனால் இந்த வீடியோவில், சிறுத்தைக்கு பாடம் புகட்ட சிங்கம் மரத்தின் மேல் ஏறிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வீடியோவில், சிறுத்தை மரத்தின் மேல் தனது இரையைப் பிடித்து உண்பது போல் தெரிகிறது. இதைப் பார்த்த சிங்கம், தனது பசிக்காக மரத்தில் ஏறி, சிறுத்தையைத் தாக்குகிறது. சில நொடிகளில் இருவருக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்படுகிறது. சிங்கம் தனது முழு வலிமையையும் பயன்படுத்தி சிறுத்தையை அடக்க முயல்கிறது. ஆனால் அதே சமயம், இருவரின் எடையையும் தாங்க முடியாமல் மரக் கிளை முறிந்து போகிறது. உடனே இருவரும் கீழே விழ, சிறுத்தை வேகமாக எழுந்து ஓடுகிறது. ஆனால் சிங்கம் அதிர்ச்சியுடன் சாய்ந்து கிடப்பது போல் தெரிகிறது.

இந்த 11 விநாடிகள் கொண்ட வீடியோவை “@AMAZlNGNATURE” என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 42 லட்சம் பேருக்கு மேல் இதைப் பார்த்துள்ளனர். “இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் சிறுத்தை பந்தைப் போல துள்ளி எழுந்தது, அதிசயம்!” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இன்னொருவர், “சிறுத்தையின் கால்களில் ஸ்பிரிங் போட்ட மாதிரி இருக்கே!” என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். இயற்கையின் ஆபத்தான தருணத்தைப் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.