குஜராத் மாநிலத்தில் புதிய அரசியல் மாற்றம் இன்று (அக்.17) நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட மொத்தம் 26 பேருக்கு புதிய அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இவர்கள் பதவியேற்றனர். இதற்கு முன், முதல்வரைத் தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருந்ததால், முழுமையான புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைச்சரவை, பாஜக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும், மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரிவாபா ஜடேஜாவின் நுழைவு, குஜராத் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சேவையை தன் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படப்போவதாக அவர் தெரிவித்ததுடன், பாஜக தலைமையினர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்