சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 97600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 13309 ரூபாய்க்கும், ஒரு சவரன் 106472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு மூன்று ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 203 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 203000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
