தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

“தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024–25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (தீபாவளி போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025–26 ஆம் ஆண்டில் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், வாணிபக் கழகத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் பணிபுரியும் 24,816 தகுதியுடைய ஊழியர்களுக்கு ரூ.40.62 கோடி செலவில் இந்த நன்மைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் அரசின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.