இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வேடிக்கையான வீடியோ, பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த சுவாரசியமான காட்சியை காட்டுகிறது. அதில் கம்ருதீன் மற்றும் அரோரா ஆகியோர் திவாகரிடம் சென்று, “ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று கேட்கிறார்கள். அதோடு, நாடோடிகள் திரைப்படத்தைப் போல, “செயினை எல்லாம் கழற்றி தர மாட்டீர்களா?” என்று கேலியாக கேட்கிறார்கள். இது வீட்டுக்குள் உள்ள அனைவரையும் சிரிக்க வைக்கிறது.
திவாகர் உடனே பதில் அளித்து, “நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன், புதுப்பேட்டை படத்தைப் போல டக்குனு தாலி கட்டிடுவேன்” என்று நகைச்சுவையாக கூறுகிறார். இந்த உரையாடல் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் பகிர்ந்து சிரித்து வருகின்றனர்.
