தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மேற்பார்வை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முரசொலி நாளிதழ் நடிகர் விஜயை கரூர் துயரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது தவெக கொல்லும் ஆனால் நீதி வெல்லும். 41 உயிர்களைக் கொன்ற விஜய் பனையூரில் பதுங்கிக் கொண்டே நீதி வெல்லும் என்று பதிவிட்டுள்ளார் என விமர்சனம் செய்துள்ளது.

அதன் பிறகு அஜித் குமார் மரணம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் பேசும்போது எதற்காக சிபிஐ பின்னால் ஒளிகிறீர்கள். சிபிஐ என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பாவை என்றார். இன்று அவரே கைப்பாவையின் கைப்பாவையாக ஆகிவிட்டார். அவரது கட்சியே  அவர்களால் உருவாக்கப்பட்டதுதானே என விமர்சனம் செய்துள்ளது. அதோடு மீட்டிங் என்ற பெயரில் சூட்டிங் நடத்திவிட்டு சினிமாவில் சும்மா கொலை செய்வதை போல் நிஜத்திலும் கொன்றுவிட்டு லைட்டை ஆஃப் செய்து விளையாடும் சாடிஸ்ட் மனிதனின் விளம்பர பசிக்கு 41 உயிர்கள் பலியா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் கரூர் துயர சம்பவத்தில் முரசொலி மாறன் நாளிதழ் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.