‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் ஏற்படுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, ‘ஆதித்யா வர்மா’ படம் மூலம் அறிமுகமான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘தீக்கொளுத்தி’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இதுவொரு முக்கிய திருப்பமாகக் கருதப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் நெஞ்சை தொட்ட சமூக பார்வையுடன் கூடிய படைப்பாக இந்த திரைப்படமும் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது