தமிழக பதிவுத்துறையில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, எங்கிருந்தும் இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப்பதிவு” எனும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த முக்கிய மாற்றம், முதல் விற்பனை மனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், வங்கிக் கடன் அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் போன்ற குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்த, ஆவணத்தில் தொடர்புடைய விற்பனையாளர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் ஆதார் விபரங்கள் கட்டாயமாகும். மேலும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களின் கைரேகை அல்லது கருவிழிப் படலத்தைப் பயன்படுத்தி அடையாளத்தைச் சரிபார்க்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.