திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறுமி திருவாலங்காடு ஒன்றியம் கொல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவா(24) என்ற வாலிபரிடம் தனது காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.