2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வலிமையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் பாக முகவர்கள் (Booth Agent) பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து இதில் ஆலோசனை நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிமுக கொடியை ஏந்தி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்று உரையாற்றிய அவர், “மக்கள் நலனுக்காக அதிமுக தான் உறுதியான மாற்று ஆட்சியாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
இதனால், விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுகவின் தாக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகக் காணப்படுகிறது.
