மேற்கு வங்காள மாநிலம் மேற்கு வர்த்தமான் மாவட்டம் சோபாபூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது ஆண் நண்பருடன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்திற்கு சென்று விட்டு இருவரும் திரும்பியபோது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை பின்தொடர்ந்தது.

கல்லூரி அருகே சென்றபோது, அந்த கும்பல் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, மாணவியை அந்த கும்பல் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் கடத்தி சென்றது. அங்கு, கும்பல் உறுப்பினர்களில் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியின் செல்போனையும் அவர்கள் பறித்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, “இச்சம்பவத்தை யாரிடமாவது கூறினால் உயிருடன் விடமாட்டோம்” என்று மிரட்டியதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பின்னர் தப்பித்த மாணவி, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். மேலும் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த  கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.