2025 ஆம் ஆண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உலகமே எதிர்பார்த்த அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரீனா மச்சோடா என்பவருக்கு வழங்குவதாக நார்வே நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. இவர் வென்சுலாவின் ஜனநாயக இயக்கத்தின் தலைவராவார்.
இவர் வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஆற்றிற அயராத உழைப்பிற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான போராட்டத்தை வழி வகுத்து அமைதியை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் சில உலக நாட்டு தலைவர்களும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
