சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாகவும் ஆச்சரியமானதாகவும் அமைந்துள்ளது. அதாவது பிலிப்பைன்ஸை சேர்ந்த ரஸ்ஸல் சால்வடோர் நிகழ்த்திய ஒரு அசாதாரணமான சாதனை நிகழ்வு தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இவர் தன்னுடைய மூக்கின் வழியாக ஒரு டம்ளர் பீரை 20 வினாடிகளில் குடிக்கிறார்.

 

இதேபோன்று அவர் கடந்த காலங்களில் பலமுறை செய்துள்ளதாக அவருடைய நண்பர் கூறினார். மேலும் அவர் அந்த கிளாஸில் உள்ள பீர் காலியாகும் வரை அதனை எடுக்காமல் அப்படியே தன் மூக்கின் வழியாக குடித்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் ஆச்சரியத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.