சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென அவரது வாகனத்தில் ஏதோ சிக்கியது போல உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது, டயரில் தங்க மோதிரம் ஒன்று பதிந்து கிடந்தது. இது உண்மையா, பொய்யா என்ற கேள்வியில் நெட்டிசன்கள் இரு பிரிவாகி விவாதித்து வருகின்றனர். சிலர், “அது உண்மையாக இருக்க முடியாது, ஒரு மோதிரம் டயரின் அதிர்வுகளையும் அழுத்தத்தையும் தாங்கி சேதாரம் ஆகாமல் இருக்க முடியாது” என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Thiyagarajan (@rajarajan4114)

“>மற்றொருபுறம், சிலர் இதை தெய்வத்தின் சின்னமாகக் காண்கிறார்கள். “கஷ்டத்தில் இருக்கும் நல்லவர்களுக்கு தெய்வம் கூரையைப் பிரித்துக் கொடுத்து உதவுவதாக பழமொழி உண்டு, அதுபோல் இதுவும் ஒரு அதிசயமே” என நம்புகின்றனர். இன்னும் சிலர் இதை staged video (அமைக்கப்பட்ட வீடியோ) என்று கருதுகின்றனர்.

“நமக்கு மட்டும் இப்படியான அதிசயம் நடப்பதில்லை, நமது டயரில் தங்கம் அல்ல மாட்டு சாணி தான் சிக்கும்” என சலிப்புடன் நகைச்சுவையாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எதுவாக இருந்தாலும், ஒரு டயரில் தங்க மோதிரம் சிக்கியதாக கூறப்படும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.