தமிழக அரசியலில் மீண்டும் பழைய அரசியல் உரை ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதிமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வழங்கிய இந்த உரையில், “பாஜக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை எதிரியாக இருந்தால் அதிமுக எப்படி தவெகவுடன் கூட்டணி அமைக்கும்?” என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் எடப்பாடி பழனிசாமி, “கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்களுடைய கொள்கை தனித்துவமானது. ஆனால் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பொதுவான எதிரியை தோற்கடிப்பதே எங்களின் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் இருக்கத்தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை வேறானதாக இருந்தாலும், ஊழல் செய்கின்ற திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கருத்தில் நாம் ஒன்றாக இணைந்துள்ளோம்” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

“>

 

மேலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல, உங்களுக்கும் காங்கிரஸுக்கும் ஒரே கொள்கையா? கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் ஒரே கொள்கையா? விடுதலை சிறுத்தைகளுக்கும் உங்களுக்கும் ஒரே கொள்கையா? இல்லை.

ஆனாலும் அவை உங்களுடன் இருக்கின்றன, ஏனெனில் நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டிய நிலை,” எனக் கூறியுள்ளார். “திமுக செய்யும் தவறுகளை கூட்டணி கட்சிகள் சுமந்து கொண்டு செல்கின்றன” என விமர்சித்த இந்த வீடியோ, தற்போதைய கூட்டணி அரசியல் சூழலில் மீண்டும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதனால், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் மேடையில் கூட்டணிகளின் கொள்கை நிலைப்பாடு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.